Friday, December 16, 2011

பிரிட்டனில் பலத்த காற்று: போக்குவரத்து கடுமையாக பாதிப்பு

பிரிட்டனின் தென் கடற்கரைப் பகுதியில் புயல்காற்று மணிக்கு எழுபது மீற்றர் வேகத்தில் வீசியது. இதனால் மின்கம்பங்கள் தரையில் சாய்ந்தன.
சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது, மின்சாரம் இல்லாததால் நகரங்கள் இருளில் மூழ்கின. இந்த வார இறுதியில் இன்னும் பலமான காற்று வீசும் என்று வானிலை அறிவிப்பு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஆறுகளில் வெள்ளம் பெருகுவதால் பிரான்ஸ் நாட்டிற்கு சென்று வரும் படகுகளும் நிறுத்தப்பட்டன. இன்னும் ஒரு பலத்த புயல் வீசக்கூடும் என்பதால் நிலைமையைக் கூர்ந்து கவனித்து வருவதாக வானிலை அறிவிப்பாளர் டிம் ஹியூசன் தெரிவித்தார்.
வானிலை அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்படுவதால் மக்கள் அதனைக் கேட்டு செயல்படுவது பாதிப்புகளைத் தடுக்கும் என்றார்.
ஸ்காட்லாந்தில் பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் சாலைகளில் வாகனங்கள் செல்ல சிரமப்படுகின்றன. பத்து சென்டி மீற்றர் உயரத்திற்கு பனி படர்ந்துள்ளது. எனவே மாலை வேலைகளில் ஓட்டுநர்கள் தம் வண்டியின் வேகத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினார்.

No comments:

Post a Comment