
விமானம் மோதும் போது கட்டிடம் எவ்வாறு தோற்றமளித்ததோ அதே போன்றதொறு கட்டிடத்தை தென் கொரியாவில் உள்ள சியோல் நகரில் கட்ட உள்ளனர்.
இந்த கட்டிடத்தை நெதர்லாந்து நாட்டை சேர்ந்த எம்.வி. ஆர்.டி.வி என்ற கட்டிட நிறுவனம் வடிவமைக்க உள்ளது.
கட்டித்தில் புகை தெரிவது போன்ற இடத்தில் இரு கட்டிடத்தையும் இணைத்து உள்ளனர். அதில் ஹோட்டல், பூங்கா, நீச்சல் குளம் போன்றவை அமைக்கப்படுகிறது.
இந்த கட்டிடம் வடிவைமைப்புக்கு அமெரிக்கர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதற்காக கட்டிட வடிவமைப்பு நிறுவனம் மன்னிப்பு கேட்டு உள்ளது.
ஆனாலும் திட்டமிட்டபடி கட்டிடம் கட்டப்படும் என்று கூறியுள்ளது. அடுத்தமாதம் கட்டிட பணி தொடங்கி 3 ஆண்டில் கட்டிடத்தை முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.


No comments:
Post a Comment